politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அதாவலே :- சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும்.
ச.சா - ஒடுக்கப்பட்ட மக்களோட தலைவரா இருந்த இவரு எப்புடி ஆயிட்டாரு..!!
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- நீட் தேர்விலிருந்து விலக்கு பெறப் போராடுகிறோம்.
ச.சா - கடிதம் எழுதுனதச் சொல்றீங்களா..??
 

செய்தி :- தமிழகப் பொதுக் கலந்தாய்வில் 54 சதவிகித பொறியியல் பட்டப்படிப்பு இடங்கள் நிரம்பவில்லை.
ச.சா - இப்பவே இப்புடினா, புதுக் கல்விக் கொள்கை வந்தா மூடுவிழாதான்..!!
 

மத்திய அமைச்சர் அமித் ஷா: - மாநிலங்களில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தால் வளர்ச்சி பாதிக்கும்.
ச.சா - அப்புறம் சட்டம் ஒழுங்க உங்க கட்சிக்காரங்க சீர்குலைக்குறாங்க..??

;